Wednesday, July 9, 2008

ஆசை



மறக்க இயலா முகம் ...


அன்பாய் வருடும் விரல்கள் ...


கவலை நீக்கும் கனிவான மொழிகள் ...


எனக்காக காத்திருந்த நாட்கள் ...


பேரன்பினால் நெகிழ்வித்த தருணங்கள் ...


மடியினில் உறங்கிய சுகம் ...


இவை அனைத்தையும் இழந்து


இயந்திரமாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் - நீ அருகில் இல்லாமல் ...?


மறு பிறவியிலும் பிறக்க ஆசைபடுகின்றேன் - உன் மகனாக .....!!!!!!!!!